Monday, July 15, 2013

கவிதை மாதிரி ஒரு முயற்சி

என்னை நானே அடிக்க மாட்டேன் என்பதால் என் டைரியிலும், நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க அடிக்கனும்னு நினைக்க கூட மாட்டீர்கள் என்பதால் வகுப்பறையிலும் இதை எழுதுகிறேன்.

வானம் எனும் கடலினிலே
விண்மீன்கள் நீந்தி வர
வெண்ணிற ஓடமாக நீ
எங்கு செல்கிறாய் வெள்ளி நிலவே.

வானம் எனும் வீதியிலே
நட்சத்திர சொந்தம் தொடர்ந்து வர
ஊர்வலமாக நீயும்
எங்கு செல்கிறாய் வண்ண நிலவே

வானம் எனும் மெத்தையிலே
மேகமெனும் தலையணை மேல்
நிம்மதியாய் உறங்காமல் நீ
எங்கு செல்கிறாய் வெண்ணிலவே

வானம் எனும் சிறையினிலே
விண்மீன்கள் காவலாக
எத்தனை நாள்
அடைந்திருப்பாய் வெண்ணிலவே

ஆவலுடன் உனைக்காண இங்கு நான் காத்திருக்க
மேகத்திரையின் மறைவினிலே
கண்ணாமூச்சி விளையாட்டாய
எங்கு ஒளிகின்றாய் பிள்ளை நிலவே...


ஆட்டோ, டாடா சுமோ லாம். வீட்டு பக்கம் வரப்டாது சொல்லிட்டேன்....

3 comments:

கிவியன் said...

வானம் எனும் சோலையிலே
மின்மினிகள் பூத்திருக்க
வெண்மதியே நீயும்
கார் இருள் சூழ்ந்து இருக்கும் மறைநிலவே

வானம் எனும் மேடையிலே
சர விளக்குகள் எரிந்திருக்க
நடனமாடும் தேவைதை நீ
திரை பின்னே மறைகிறாயே பிறைநிலவே

கிவியன் said...

தூங்கிட்டிருந்த சிங்கத்த தட்டி எழுப்பாதீங்க

ஜெயந்தி நாராயணன் said...

நீங்க சிங்கம்தான்... ஒப்புக்கிறேன்..
பாமரத்தனமான ஒரு முயற்சிக்கு கவித்துவமா பதில் போட்டு சுண்டெலிய மிதித்ததை வண்மையாக கண்டிக்கிறேன்...