Monday, October 6, 2014

பைக்கோத்ஸவம்

திடீரென்று ஒரு நாள் நாராயணன் "இன்னிக்கி ஆபிஸ்க்கு ஸ்கூட்டர் எடுத்துண்டு போறியா... ஓட்ட முடிஞ்சதுன்ன இன்னொரு டூ வீலர் வாங்கிடலாம் .."

உடனே எக்ஸைட் ஆயிட்டேன்... வீட்டிலிருந்து ஆபிஸ் 13 கிலோமீட்டர் அதுவும் கிண்டி தாண்டி போவது எனக்கு கொஞ்சம் சவாலான விஷயம்தான்..காலைல ரொம்ப கஷ்டமில்லாமல் போய்விட்டேன் ... சாயங்காலம் கூட கிண்டி ப்ரிட்ஜ் கிட்ட மட்டும்தான் ஒரு டெம்போ கிட்ட வந்து ஹாரன் அடிச்சு க்ளோஸா போனதுல கொஞ்சம் பயந்துட்டேன்...

ஆனாக் கூட தினமும் போகும் அளவு நம்பிக்கை வரலை... சரி எப்படின்னாலும் வீட்டுக்கு இன்னொரு வண்டி தேவைப்பட்டதால் வாங்கிடலாம்னு முடிவு பண்ணி ஹோண்டா ஷோ ரூம் போனோம்... ஆக்டிவாவோட அழகான காதலி மாதிரி ஸ்லீக்கா அழகா ஆக்டிவா ஐ..
எவ்வளவு சிசி, எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்னுலாம் இவர் கேட்டுக் கொண்டிருக்க, நான் எந்தக் கலரில் ஐ அழகி இன்னும் அழகாயிருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்..., "சும்மா சொல்லுவாங்க சார் 55 லாம் வராது... அதுவும் லேடிஸ் ஓட்டினா இன்னும் கம்மியா வரும்..திடீர்னு ஆக்ஸிலேட்டர் ரைஸ் பண்னுவாங்க, டகால்னு கொறைச்சுடுவாங்க... ப்ரேக் அதிகமா பிடிப்பாங்க ..." (எவண்டா இவன் நா வண்டி ஓட்றத பக்கத்துல இருந்து பார்த்தாப்ல சொல்றான்)... அப்படியே கண்ண விட்டுண்டு வந்தப்ப, மஞ்சள் கலர்ல, மெஜஸ்டிக்கா நின்ன அந்த வண்டியின் அழகப்பார்த்து கிட்ட போய் சீட்டை தடவிக்கொண்டிருந்த போது, " மேடம் டியோ மேடம்... செம பிக்கப் இருக்கும் காலேஜ் கேர்ல்ஸ்லாம் இதான் விரும்பாராங்க.. " " ஜெயந்தி ஓவர் பிக்கெப் உடம்புக்கு ஆகாது.. எடத்த காலி பண்ணு.." மறுபடியும் ஆக்டிவா ஐ கிட்டயே வந்து, டெஸ்ட் ட்ரைவ் கேட்டு ஓட்டிப் பார்த்து, ஒரு வாரத்துல வெள்ளை நிற வண்டிய புக் பண்ணியாச்சு.... " சார் ரெஜிஸ்டிரேஷன் முடிஞ்சு சனிக்கிழமை காலைல எடுத்துக்கங்க சார்"..

சனிக்கிழமை அப்படி இப்படினு காத்திருக்க வச்சு 12 மணி ஆக்கிட்டான்.... "லாங் டிஸ்டன்ஸ் போப்போற கையோட ஹெல்மெட் வாங்கிக்கோ ... நீ வண்டிய எடுத்துண்டு வீட்டுக்கு போ, நான் ஆபிஸுக்கு போறேன். ,"_ இவர்

நான் இது வரைக்கும் ஹெல்மெட் போட்டதே இல்ல... உத்தமபுத்திரன் க்ளைமேக்ஸ்ல சிவாஜி அந்த கவசத்த போட்டுண்டு குதிரைல பறக்கர மாதிரி நானும் வண்டில ஏறிட்டேன்... கொஞ்ச தூரம் போன உடனே ஆஃப் ஆயிடுத்து.. அப்புறம் நூறு மீட்டருக்கு ஒரு தடவ ஆஃப் ஆகி ஆஃப் ஆகி ஓடித்து... ஒரு பக்கம் ஹெல்மெட் வேற அவஸ்தையா இருக்க, காலை தரையில் ஊனப்போக கால் எட்டாமல் செருப்பு கழல , அதை சரி செய்த படியே காலை மேலே தூக்கி வண்டியை ஓட்டினால், கால் பக்கம் எதோ ஒரு சங்கடம்... எதோ சிக்கிக் கொண்டிருந்தது... பயந்து பயந்து வண்டியை மெதுவாக விட்டபடியே பார்த்தால் , செருப்பு புடவைக்குள் நன்றாக சிக்கிக் கொண்டிருந்தது... ஒரு மாதிரியாக, செருப்பு, புடவை, ஹெல்மெட், ஆஃப் ஆகும் வண்டி எல்லாத்தயும் சமாளித்து ஒரு வழியா வீடு வரத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து...

அப்புறம் திங்கட் கிழமை வண்டியை சரி செய்து புதன் கிழமை வெற்றிகரமாக ஆபிஸ்க்கு எடுத்தாச்சு... அன்றும் போகும் போது பிரச்சனை இல்லை... வரும் போது காந்தி மண்டபம் தாண்டி இடது பக்கமே போகாமல் எப்படியோ ரோட்டின் நடுவிலே வந்து விட்டேன்... ப்ரிட்ஜ் ஏறி இறங்கி லெஃப்ட் போகவே முடியல... முழுக்க முழுக்க ,கடைசில கிண்டிக்கு இடது புறம் திரும்பும் வரை... இரண்டு புறமும் சல் சல்லுன்னு செம்ம வேகமா யம கிங்கரர்களா போறாங்க...,"நமோ நாராயணா, நமோ நாராயணா.... கிட்ட எதாவது வண்டி வந்துட்டா நமோஓஒ நாராயணா ந்னு இன்னும் கொஞ்சம் ஷேக்கோட.." நான் எப்படி வண்டி ஓட்டினேன்னே புரியல.. மவுண்ட் வர வரைக்கும்... அதுக்கப்புறம் பரவால்ல... ராத்திரி படுத்தா ஒரே பயம் பயம்மா போச்சு... இன்னிக்கி இத்தனைக்கும் ஒரு பஸ் கூட நம்மல க்ராஸ் பண்ணல... அது வேற வந்தா என்ன ஆகும்.. கனவெல்லாம் என்னய சுத்தி பைக்கும் காருமாகவே ஓட, கார்த்தால எழுந்து, "இதெல்லாம் சரிப்பட்டு வராது நா பஸ்லயே போறேன்னு அழாத குறையா சொன்னேன்..

சரி பயமா இருந்தா இந்த ரூட்ல போகாத கோட்டூர்புரம் வழியா போன்னார் இவர். ஒரு நாள் கேப் விடுவோம்னு பஸ்ல ஆபிஸ் போனா உடன் வேலை செய்யற பையன் டி நகர், போய் பார்க் ஷெரட்டன் வழியா ஆந்திர மகிள சபா வந்து அடையார் வர ரூட் போட்டு கொடுத்தான்.... அது பெட்டரா இருந்ததால அடுத்த நாள் விசாரிச்சுண்ட்டே போனேன்... ஆந்திர மகிள சபா வரைக்கும் கரெக்டா போனேன்... அங்க ஒன் வே.. அதுனால சுத்திட்டு வந்து ரைட் எடுக்கனும், தப்பா லெட் எடுத்துட்டேன். போயிண்டே இருக்கேன்... அடையார் மாதிரியும் இருக்கு ...இல்லாத மாதிரியும் இருக்கு, ஒரு சிக்னல்ல ஆட்டோக்காரர் கிட்ட, "இன்னும் அடையார் எவ்வளவு தூரம் போகனும் "நு கேக்க, "ஆப்போஸிட் சைட்ல ரெண்டு கிலோ மீட்டர் மேல வந்துட்டீங்க, யூ டர்ன் எடுத்து நேர போங்க" என்று வழி சொல்ல ஒரு வழியா ஆபிஸ் வந்து ரீடிங் பார்த்தா இருபது கிலோ மீட்டர் வந்துருக்கேன்...

சாயங்காலம், மறுபடியும் அதே ரூட் கொஞ்சம் வழி மறந்து, ஆர்.ஏ புரத்தில் சுத்தி, டி.நகர் ட்ராஃபிக்கில் மாட்டி, ஒரு வழியாக வீடு வந்த போது கை காலெல்லாம் பார்ட் பார்ட்டா வலி எடுக்க.... வீட்டுக்குள் நுழைந்த உடனேயே, "நவராத்திரி வெள்ளிக்கிழமை யா இருக்கு... அக்கம்பக்கத்துல போய் அழைச்சுட்டு வெத்தலை பாக்கு வாங்கிண்டு வா" என்று மாமியார் சொன்னதும்... ஓன்னு அழனும் போல இருந்தது... நோ.. நோ.. வெள்ளிக்கிழமை விளக்கு வச்சு... நோ சான்ஸ்... முகம் கழுவி ஒட்ட வைத்த புன்னகையுடன் வெ.பா வாங்க கிளம்பினேன்.. அத்தோட டூ வீலருக்கு மங்களம்... சுப மங்களம். பாடியாச்சு..

4 comments:

கிவியன் said...

சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுவது தற்காலத்தில் தினமும் "வூட்ல செல்ட்டு" வந்தாப்லதான். என் சொந்த அனுபவத்தில் பயந்தால் ரோட்டில் உனக்கு இடமில்லை. வண்டியை ஓட்டுவது என்பதெல்லாம் நடவாது. கிடைக்கும் கேப்பில் ராக்கெட் போல லாஞ்ச் செய்ய பழக வேண்டும். ஆமா அப்ப வண்டிய வாடகைக்கு விடப்போறியா?

ஜெயந்தி நாராயணன் said...

ஆபிஸ்க்குத்தான் இல்ல... மத்தபடி லோகல், டி.நகர், கோடம்பாக்கம் அம்மா வீட்டுக்குல்லாம் போவேன்... வீட்ல ஒரு ஜீவன் இதுக்காகவே காத்துண்ட்டு இருந்தது... பெண்ணரசி காட்ல மழை..
ஆபிஸிலும் பொறுப்புகள் ஜாஸ்தி, வீட்ல நொழஞச உடனே ஹவுஸ் வைஃப் ரோல், எந்த காம்ப்ரமைஸும் இல்லாம எடுக்கனும் ... நமக்கு ஆட்டோதான் சரி... ஏறி உக்கர்ந்தோமோ... இப்ப உனக்கு பதில் போட்டனா ... கொஞ்சம் பாட்டு கேட்டனா ...அத்த விட்டுட்டு எதுக்குப்பா டென்ஷன்... வேணாம்னு விட்டேன்.. :)

sreesnake said...

//(எவண்டா இவன் நா வண்டி ஓட்றத பக்கத்துல இருந்து பார்த்தாப்ல "கரெக்டா" சொல்றான்).//:)

Siva said...

நல்ல பதிவு. சென்னை traffic ஒரு மாதிரி எல்லோரையும் ஒரு வழி பண்ணிவிடுகிறது.

சிவா